ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் வெண்கலம்: ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை.
ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய ஸ்குவாஷ் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கும் அவர் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய அணியின் இந்த சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வீராங்கனைகள் தங்களது திறமை, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் விஜய், அவர்களின் சாதனை தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனுக்கு மேலும் வலுசேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோரின் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்திலும் இருவரும் பல்வேறு வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்த வேண்டும் என முதல்வர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்