அட்டப்பாடியில் மனைவி, குழந்தை கொலை – பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

அட்டப்பாடி:

கேரள மாநிலம் அட்டப்பாடியில் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து, உடல்களை துண்டுகளாக வெட்டி சாக்குகளில் கட்டி வீசிய சம்பவத்தில், முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

பெண்ணின் தலையில் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தி கொலை செய்திருப்பதும், குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும் முதற்கட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பின்னர் இருவரின் கழுத்தையும் அறுத்து, உடல்களை துண்டுகளாக வெட்டி மூன்று சாக்குகளில் அடைத்து வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பவானி ஆற்றில் பெண்ணும் அவரது குழந்தையும் சாக்குகளில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அப்பகுதியில் கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் சாக்குகளைப் பார்த்துள்ளனர். முதல் சாக்கை திறந்து பார்த்தபோது அதில் உடல் உறுப்புகள் இருப்பது தெரியவந்ததையடுத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவத்துக்குப் பிறகு மேற்கு வங்காளத்துக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் முக்கிய குற்றவாளியைப் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணையில், சம்பவத்துக்கு சுமார் 20 நாட்களுக்கு முன்புதான் குற்றம் சாட்டப்பட்ட நபரும் அவரது குடும்பத்தினரும் அட்டப்பாடிக்கு வந்தது தெரியவந்துள்ளது.

முக்கியமாக, உடல்கள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை மையமாக வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளி தொடர்பான முக்கிய தடயம் கிடைத்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து அட்டப்பாடி கோட்டத்தராவில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சாக்குகளே பின்னர் உடல்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தப்பியோடிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


അട്ടപ്പാടിയിൽ ഭാര്യയെയും കുഞ്ഞിനെയും കൊലപ്പെടുത്തി മൃതദേഹം ഉപേക്ഷിച്ച സംഭവം – പോസ്റ്റ്മോർട്ടം റിപ്പോർട്ടിൽ ഞെട്ടിക്കുന്ന വിവരങ്ങൾ!

അട്ടപ്പാടി:

അട്ടപ്പാടിയിൽ ഭാര്യയെയും കുഞ്ഞിനെയും കൊലപ്പെടുത്തി മൃതദേഹങ്ങൾ വെട്ടിനുറുക്കി ചാക്കുകളിൽ കെട്ടി ഉപേക്ഷിച്ച സംഭവത്തിൽ പ്രാഥമിക പോസ്റ്റ്മോർട്ടം റിപ്പോർട്ട് പുറത്ത്.

യുവതിയുടെ തലയിൽ വെട്ടേറ്റാണ് കൊലപ്പെടുത്തിയതെന്നും കുഞ്ഞിനെ കഴുത്ത് ഞെരിച്ചാണ് കൊലപ്പെടുത്തിയതെന്നുമാണ് പ്രാഥമിക പോസ്റ്റ്മോർട്ടം റിപ്പോർട്ടിലെ കണ്ടെത്തൽ. യുവതിയുടെ തലയിലും മുറിവുകൾ കണ്ടെത്തിയിട്ടുണ്ട്.

കൊലപാതകത്തിന് ശേഷം ഇരുവരുടെയും കഴുത്തറുത്ത് ശരീരഭാഗങ്ങൾ കഷണങ്ങളാക്കി മൂന്ന് ചാക്കുകളിലാക്കി ഉപേക്ഷിക്കുകയായിരുന്നുവെന്നാണ് അന്വേഷണത്തിൽ വ്യക്തമായത്.

ഞായറാഴ്ചയാണ് ഭവാനിപ്പുഴയിൽ യുവതിയുടെയും കുഞ്ഞിന്റെയും മൃതദേഹങ്ങൾ ചാക്കിൽ കെട്ടിയ നിലയിൽ കണ്ടെത്തിയത്. പ്രദേശത്ത് പശുവിനെ മേയ്ക്കാൻ എത്തിയവരാണ് ചാക്കുകൾ കണ്ടത്. ആദ്യ ചാക്ക് തുറന്നപ്പോൾ ശരീരഭാഗങ്ങളാണെന്ന് മനസ്സിലായതോടെ പൊലീസിനെ വിവരം അറിയിക്കുകയായിരുന്നു.

കൊലപാതകത്തിന് ശേഷം ബംഗാളിലേക്ക് രക്ഷപ്പെട്ടതായി സംശയിക്കുന്ന പ്രതിക്കായി പൊലീസ് അന്വേഷണം ഊർജിതമാക്കിയിരിക്കുകയാണ്.

സംഭവത്തിന് ഏകദേശം 20 ദിവസം മുമ്പാണ് പ്രതിയും കുടുംബവും അട്ടപ്പാടിയിൽ എത്തിയതെന്നാണ് പൊലീസിന്റെ കണ്ടെത്തൽ.

മൃതശരീരങ്ങൾ ഉപേക്ഷിച്ച ചാക്കുകൾ കേന്ദ്രീകരിച്ച് നടത്തിയ അന്വേഷണത്തിലാണ് പ്രതിയെക്കുറിച്ചുള്ള നിർണായക സൂചന പൊലീസിന് ലഭിച്ചത്. കോയമ്പത്തൂരിൽ നിന്ന് അട്ടപ്പാടി കോട്ടത്തറയിലെ ഒരു കടയിലേക്ക് സാധനങ്ങൾ എത്തിച്ച ചാക്കുകളാണ് മൃതദേഹങ്ങൾ ഉപേക്ഷിക്കാൻ ഉപയോഗിച്ചതെന്നാണ് അന്വേഷണ സംഘത്തിന്റെ നിഗമനം.

പ്രതിയെ കണ്ടെത്താനുള്ള അന്വേഷണം ഊർജിതമായി തുടരുകയാണ്.

Leave a Reply