ஆவடி திருமுல்லைவாயிலில் 2 புதிய மின்மாற்றிகள்! எம்.எல்.ஏ. ஆர். ரமேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்: ஆவடி வட்டத்திற்குட்பட்ட திருமுல்லைவாயில் மின் பிரிவில், பொதுமக்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விரிவாக்கப் பணித் திட்டத்தின் கீழ், மணலோடை தெரு மற்றும் வனராணி தெரு ஆகிய பகுதிகளில் தலா 200 கே.வி.ஏ. திறன் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் ஆவடி கோட்டத்திற்குட்பட்ட திருமுல்லைவாயில் மின் பிரிவில் அமைக்கப்பட்ட இந்த மின்மாற்றிகளை, ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ஆர். ரமேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மின்பகிர்மானப் பகுதியின் ஆவடி பிரிவு செயற்பொறியாளர் கிறிஸ்டோபர் லியோ ராஜ், ஆவடி உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ் பாபு, திருமுல்லைவாயில் உதவிப் பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், அப்பகுதி மக்களின் மின்சாரத் தேவையை மேம்படுத்தவும், மின் விநியோகத்தைச் சீராக வழங்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply