2026–2027 கல்வியாண்டு: ஆஷ் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அரசு ஆயுஷ் மருத்துவப் பயிற்சிப் பள்ளிகளில் DIP / DNT பட்டயப் படிப்புகள் – அக்டோபர் 15 முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
சென்னை – அக்டோபர் 13:
2026–2027ஆம் கல்வியாண்டில், சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துறை மருத்துவப் பயிற்சிப் பள்ளிகளில் வழங்கப்படும் DIP / DNT பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இணையவழியில் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnayushselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேறு வழிகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
படிப்புகள் மற்றும் தகுதிகள்
DIP என்பது மருந்தாளுநர் பட்டயப் படிப்பையும், DNT என்பது நர்சிங் தெரபி பட்டயப் படிப்பையும் குறிக்கிறது. இந்தப் படிப்புகளுக்கான கல்வித் தகுதி பிளஸ் 2 (10+2) என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. படிப்புக் காலம் இரண்டரை ஆண்டுகள்.
சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துறை மருத்துவப் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான கல்வித் தகுதி, விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற சேர்க்கை விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 15.10.2026 அன்று தொடங்குகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 29.10.2026 மாலை 5 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை முழுமையாகப் படித்து, தேவையான சான்றிதழ்களை PDF அல்லது JPEG வடிவில் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் இணையவழிக் கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் இணையவழியாக மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பப் பதிவு, தகுதி, கட்டணம் மற்றும் சேர்க்கை தொடர்பான முழுமையான விவரங்களை www.tnayushselection.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்