பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளில் முதல்வர் விஜய் புகழஞ்சலி!
“எளிமையான வாழ்க்கை, நேர்மையான நிர்வாகம்” – காமராஜரின் வழியில் தொடர்ந்து பயணிப்போம் என பதிவு
பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், எளிமையான வாழ்க்கையிலும், நேர்மையான நிர்வாகத்திலும் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜரை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், அவருக்கு தனது புகழ் வணக்கங்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும், கிராமந்தோறும் பள்ளிகளைத் திறந்து, மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அணைகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கியதுடன், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தொழில் முன்னேற்றத்திற்கும், வேளாண் வளர்ச்சிக்கும் காமராஜர் பங்களித்ததாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னலமற்ற பொதுச்சேவைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த காமராஜரின் அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையைப் போற்றிய முதலமைச்சர், அவர் காட்டிய நல்ல வழியில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்