மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: “தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாட்டின் பெருமை!” – முதல்வர் ஜோசப் விஜய்

சென்னை – செப்டம்பர் 16: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளமாக விளங்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், நம்பிக்கையின் ஆன்மிகம் மற்றும் வரலாற்றுச் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்நாளானது இறைவன் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்” என முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply