விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் சதுர்த்தி திருநாளில் அனைவருக்கும் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விநாயகர் சதுர்த்தி நாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேற வேண்டும் என்றும், புதிய நம்பிக்கைகள் மலர்ந்து ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பெருக வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறவும், அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றிப் பாதையில் பயணிக்கவும் விநாயகர் அருள் புரிய வேண்டும் என்றும் முதல்வர் ஜோசப் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply