பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய்!
“வலிமையான இந்தியாவை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்” – நீண்ட ஆயுள், நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்து
சென்னை – செப்டம்பர் 17: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து பதிவை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கும் வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தனது பதிவில், “வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 17, 2026
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I… pic.twitter.com/2stjwXq2JC
மேலும், பிரதமர் நரேந்திர மோடி நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இதே வாழ்த்து கருத்தை ஆங்கிலத்திலும் அவர் தனது பதிவில் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்