வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்: முதல்வர் விஜய் மரியாதை!

சென்னை: ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், தாய்மண்ணின் உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் இறுதிவரை போராடிய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி, அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிவும், உரிமைகளைக் காக்கும் உறுதியும், தாய்மண்ணைப் போற்றும் உணர்வும் ஒவ்வொருவரிடமும் வளர வேண்டும் என்பதற்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை ஒரு பாடமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகமும் தீரமும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத பெருமையாக நிலைத்திருக்கும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Leave a Reply