கோவையில் ஈட்டி எறிதல் வீரர் சிலை திறப்பு: விளையாட்டை ஊக்குவிக்கும் புதிய முயற்சி!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகரின் முக்கியப் பகுதியான VOC ரவுண்டானா பகுதியில், விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையில் ஈட்டி எறிதல் வீரரின் புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Address Developers Private Limited நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்தச் சிலை திறப்பு விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. விளையாட்டுத் துறையின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துரைப்பதுடன், இளைய தலைமுறையினரிடையே குறிப்பாக ஈட்டி எறிதல் விளையாட்டு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். புதிய ஈட்டி எறிதல் வீரர் சிலையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் Address Developers Private Limited நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாநகரின் வளர்ச்சி மற்றும் அழகுபடுத்துதல் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த முயற்சி அமைந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கோயம்புத்தூரைச் சேர்ந்த நிகழ்வு மேலாண்மை நிறுவனமான Sai Abimaan Ads and Events நிறுவனத்தின் நிறுவனர் தேன்மொழி தினேஷ்குமார் ஏற்பாட்டில் விழா ஒருங்கிணைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோயம்புத்தூர் மாநகரின் முக்கியப் பகுதியில் விளையாட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, இளம் தலைமுறையினருக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக்குரல்