பிரதமர் மோடியின் 25 ஆண்டு அரசியல் பயணம்: தருமபுரியில் பாஜக சார்பில் சேவை தீப பேரணி!

உறுதிமொழி ஏற்று பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணி – நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சி

தருமபுரி – அக்டோபர் 7: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் மற்றும் அவரது 25 ஆண்டு கால அரசியல் சேவையை முன்னிட்டு, தருமபுரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை தீப பேரணி நடைபெற்றது. பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பாஜக சார்பில் சேவை ஜோதி/தீப பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. APCNews Tamil

தருமபுரி தொலைபேசி நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பாஜக மாநில கல்வியாளர் பிரிவு நந்தகுமார் மற்றும் மாநில தொழில் பிரிவு தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சேவை தீபம் ஏற்றப்பட்டு, பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து தீபங்களை ஏந்தியபடி பேரணியாக புறப்பட்ட அவர்கள், செக்கோடிபுறம், மீனாட்சி மருத்துவமனை, ராஜகோபால் பூங்கா வழியாகச் சென்று மீண்டும் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வந்து சேர்ந்தனர்.

இந்த பேரணியில் மாவட்ட மற்றும் நகர தலைவர் சாய் ஆறுமுகம், விளையாட்டு அணி நிர்வாகி சாய் அருண்குமார், இளைஞரணி தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு அணி மற்றும் கிளை நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியின் 25 ஆண்டு அரசியல் பயணத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு சேவை சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் சேவை ஜோதி பேரணிகள் நடத்தப்பட்டு வருவதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. APCNews Tamil

தருமபுரியில் நடைபெற்ற சேவை தீப பேரணி மீண்டும் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.

Leave a Reply