தின்னப்பட்டி 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கதிரி பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு பூஜை!
தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஒடசல்பட்டி கூட்டுரோடு அருகே தின்னப்பட்டியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கதிரி பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி தின்னப்பட்டி, அரூர், குடுமியாம்பட்டி, புளியம்பட்டி, பெங்களூரு, தருமபுரி, கடத்தூர், மணியம்பாடி, ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு, ஸ்ரீ கதிரி பெருமாளைத் தரிசனம் செய்தனர். கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று சுவாமியின் அருளைப் பெற்றனர்.
இரவு சுவாமி ஊர்வலம்; பக்தர்களுக்கு அன்னதானம்
சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து இரவு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கோயில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வழிபாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக்குரல்