துபாயில் ராம்குமாரின் ‘ராம் கம் ஷோ’: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நகைச்சுவை கொண்டாட்டம்!
துபாய், செப். 15:
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஊத் மேத்தா பகுதியில் உள்ள பாகிஸ்தான் ஆடிட்டோரியம் அரங்கில், யாத்திக் விஷன் சார்பில் ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் ஈவென்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் பிரபல மேடை நகைச்சுவையாளரும் எழுத்தாளருமான ‘ஐடி அண்ணாச்சி’ ராம்குமார் வழங்கிய ‘தமிழ் ராம் கம் ஷோ – Retired Not Hurt, துபாயில அண்ணாச்சி’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
யாத்திக் விஷன் நிறுவனத்தின் நிறுவனர்கள் ஸ்ரீராம், சுரேந்தர் மற்றும் அவர்களது நண்பர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மக்கள் RJ சாரா ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் முக்கிய பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ருக்குன் நிறுவனத்தின் நிறுவனர் ராபின்சன், தமிழககுரல் வளைகுடா நெறியாளர் கமல்கேவிஎல், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, ரேடியோ கில்லி நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர்.
மேலும், 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு ராம்குமாரின் நகைச்சுவை பேச்சு மற்றும் மேடை நிகழ்ச்சியை கண்டு ரசித்து சிரித்து மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, மக்கள் RJ சாரா முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் யாத்திக் விஷன் நிறுவனத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நன்றியுரையும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.
தமிழக வெற்றிக்குரல்