கண்ணூரில் அதிரடி சோதனை: போலி ஆதார் அட்டைகளுடன் 5 வங்கதேச பெண்கள் கைது!
கேரள மாநிலம் கண்ணூரில் ஸ்பாக்களில் பணியாற்றி வந்ததாக கூறப்படும் 5 வங்கதேச பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலி ஆதார் அட்டைகள் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சலீனா அக்தர், நஸ்மா அக்தர், தஸ்லிமா, மொய்னா மற்றும் நஸ்ரின் ஆகிய 5 பேரும் கடந்த ஜூலை மாதம் கண்ணூருக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் வைத்திருந்த போலி ஆதார் அட்டைகள் கவுகாத்தியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கண்ணூரில் செயல்பட்டு வரும் பல்வேறு ஸ்பாக்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி மற்றும் போலி ஆவணங்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்