சென்னையில் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம்!

DLF Downtown வளாகத்தில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு – GM GCC நிறுவனத்தின் புதிய மையத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜோசப் விஜய்

சென்னை – செப்டம்பர் 18: தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் முன்னிலையில், சென்னை தரமணியில் உள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் GM GCC நிறுவனத்தின் புதிய திறன் மையம் இன்று (18.09.2026) தொடங்கி வைக்கப்பட்டது.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள GM GCC வளாகத்தில் அமைந்துள்ள இந்த மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் தொடக்க கட்டத்தில் 250 பேருக்கு உயர்மதிப்பு வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையை உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் திறன் மையமாக மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த முதலீடு அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், GM நிறுவனத்தின் இந்தியா மற்றும் உலகளாவிய செயல்பாடுகள் தொடர்பான பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Leave a Reply