ஓசூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா! தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரியாதை!
கிருஷ்ணகிரி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எரி தெருவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டக் கழகம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் பங்கேற்பு
இன்று (30.10.2026) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் ஜி. சுரேஷ் மற்றும் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ். வேந்தரக்கரசன் (எ) வடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் மரியாதை செலுத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக்குரல்