கண்ணூர் மத்திய சிறையில் பரபரப்பு: அதிகாரியை தாக்கியதாக 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு!
கண்ணூர் மத்திய சிறையில் சிறை அதிகாரி மீது கைதிகள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக 3 கைதிகள் மீது கண்ணூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறை அதிகாரியான செய்தலி அஜ்சல் என்பவரை கைதிகள் தாக்கியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரியின் கழுத்தைப் பிடித்து தாக்கியதாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறை அதிகாரி வழங்கிய உத்தரவை பின்பற்ற கைதிகள் மறுத்ததாகவும், இதனைத் தொடர்ந்து அதிகாரியுடன் தகராறு ஏற்பட்டு தாக்குதல் நடந்ததாகவும் எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணு, ஆதர்ஷ், பிரம்மஜித் ஆகிய 3 கைதிகள் மீது கண்ணூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்