கேரளாவில் 38 உள்ளாட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் நேற்று நடைபெற்ற 38 உள்ளாட்சி அமைப்பு வார்டுகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இடைத்தேர்தல் முடிவுகளை கேரள மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sec.kerala.gov.in தளத்தில் உள்ள TREND பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

12 மாவட்டங்களில் உள்ள 38 உள்ளாட்சி வார்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மொத்தம் 126 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 58.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட வாரியாக பார்க்கும்போது, கண்ணூர் மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் குறைந்த வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

கொச்சி மற்றும் கோழிக்கோடு மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டு, மட்டன்னூர், சித்தூர்–தத்தமங்கலம் மற்றும் சாலக்குடி நகராட்சிகளில் தலா ஒரு வார்டு என இடைத்தேர்தல் நடைபெற்றது.

மேலும், திருவனந்தபுரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள தலா ஒரு வார்டு, 7 பிளாக் பஞ்சாயத்து வார்டுகள் மற்றும் 23 கிராம பஞ்சாயத்து வார்டுகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இன்று காலை தொடங்கும் வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து, 38 வார்டுகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.


இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.

Leave a Reply