கேரளாவில் யூடியூபர் தம்புரு வாடகை வீட்டில் உயிரிழப்பு; போலீசார் விசாரணை!

கோட்டயம்:

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், செம்பு பகுதியைச் சேர்ந்த தம்புரு (36) என்ற யூடியூபர், வைக்கம் புளிஞ்சுவட்டில் உள்ள வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

‘Fisheries Queen Thamburu’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த தம்புரு, பாரம்பரிய மீன்பிடி முறைகள் தொடர்பான காணொளிகளை வெளியிட்டு வந்தார். அவரது யூடியூப் சேனல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவாகரத்து பெற்றிருந்த தம்புரு, தனது 13 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

மகள் மாலையில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாக மூடப்பட்டிருந்ததாகவும், இதனால் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தம்புரு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வைக்கம் போலீசார், சட்ட நடைமுறைகளை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மரணத்திற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்க்வெஸ்ட் உள்ளிட்ட சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர், தம்புருவின் உடல் முட்டுச்சിറையிலுள்ள தனியார் மருத்துவமனை மோர்ச்சரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வைக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply