கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை..! 241 ஆவணங்கள் பறிமுதல்.
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை தொடங்கிய சோதனை சுமார் 7 மணி நேரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.1,020 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், கே.என்.நேருவின் சகோதரர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
இதனிடையே, சோதனை குறித்து கே.என்.நேரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளை, லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
தமிழக வெற்றிக்குரல்