கொடையாஞ்சி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம்.

நாட்றம்பள்ளி, அக். 3:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம், கொடையாஞ்சி ஊராட்சியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் M. பாரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பற்றாளர், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (OHT) இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply