கனிமக் கடத்தலுக்கு செக்..! கிருஷ்ணகிரியில் 9 லாரிகள் பறிமுதல்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி மண், கற்கள், கிரானைட் உள்ளிட்ட கனிமங்களை கடத்தியதாக 9 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ்குமார் உத்தரவின் பேரில், வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது பாஞ்சாலியூர், மதகொண்டப்பள்ளி, பாகிமானூர், கல்லாவி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி கனிமங்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் லாரிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
கனிமங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்தல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கடத்துவதைத் தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கனிமக் கடத்தல் தொடர்பாக தீவிர கண்காணிப்பு தொடரும் என்றும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்