கின்னஸ் உலக சாதனை படைத்த கிருஷ்ணகிரி கராத்தே மாணவ, மாணவிகள் – எம்.எல்.ஏ. பி. முகுந்தன் நேரில் பாராட்டு.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கராத்தே மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 16, 2026 அன்று சென்னையில், வேர்ல்ட் கராத்தே மாஸ்டர் அசோசியேஷன் சார்பில் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 810 பேர் கராத்தே “Chops” வெட்டுக்களை செய்து உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கராத்தே மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு சாதனையில் பங்களித்தனர்.

கின்னஸ் உலக சாதனையில் பங்கேற்று கிருஷ்ணகிரி தொகுதிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை, கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பி. முகுந்தன் MLA மற்றும் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நகர கழக செயலாளர் எம். சசிகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

மாணவ, மாணவிகளின் இந்த சாதனை அவர்களின் விடாமுயற்சி மற்றும் கராத்தே பயிற்சியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர்களின் சாதனைக்கு பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply