கட்டிக்கானப்பள்ளி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: 100 நாள் வேலை ஊதியம், குடிநீர் பிரச்சினை குறித்து மக்கள் கோரிக்கை.
கிருஷ்ணகிரி, அக்டோபர் 3:
கிருஷ்ணகிரி ஒன்றியம் கட்டிக்கானப்பள்ளி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பி. முகுந்தன் பாண்டியன் கலந்து கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்ல கண்ணாள், சரவணன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜீவ் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகளிருக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் பாண்டியனிடம் முன்வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.
தமிழக வெற்றிக்குரல்