காவேரிப்பட்டினத்தில் பெரியார் பிறந்தநாள் விழா! திருவுருவச் சிலைக்கு தவெக நிர்வாகிகள் மரியாதை.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில், தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பி.முகுந்தன் மற்றும் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நகர கழக செயலாளர் எம்.சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினர்.
தமிழக வெற்றிக்குரல்