கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி: வனத்துறை அறிவிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்திருந்தது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடந்த ஒரு வாரமாக அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்காலிக தடை நீக்கம்

இந்நிலையில், அருவியின் நீர்வரத்து மற்றும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று (05.10.2026) முதல் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த ஒரு வாரமாக அருவிக்கு செல்ல முடியாமல் இருந்த சுற்றுலா பயணிகள் மீண்டும் கும்பக்கரை அருவிக்கு சென்று குளித்து மகிழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் சூழல் இருப்பதால், சுற்றுலா பயணிகள் வனத்துறையின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி அருவியில் குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply