TVK News செய்தி எதிரொலி..! கும்மனூர் பாலம் கோரிக்கையை நேரில் ஆய்வு செய்த எம்எல்ஏ பி.முகுந்தன்!
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கும்மனூர் கிராம விவசாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கும்மனூர் விவசாய மக்களின் இந்த முக்கிய கோரிக்கையை TVK News சேனல் வாயிலாக செய்தியாக வெளியிட்ட நிலையில், அதன் எதிரொலியாக கிருஷ்ணகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. முகுந்தன் கும்மனூர் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, விவசாய மக்களை நேரில் சந்தித்த எம்எல்ஏ பி. முகுந்தன், தென்பெண்ணை ஆற்றை கடந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் பாலம் அமைக்க வேண்டிய அவசியம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், கும்மனூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று, பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விவசாய மக்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களின் கோரிக்கை செய்தியாக ஒலித்தது… மறுநாளே மக்கள் பிரதிநிதி நேரில் களத்திற்கு வந்தார்!
கும்மனூர் விவசாய மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் விரைவில் அமையும் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்