“இரு தொகுதி வெற்றி தவெக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று!” – லயோலா மணி
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றி!
“தமிழகத்தில் எங்கும் ஒலிக்கட்டும் விசில் புரட்சி” – சமூக வலைதளத்தில் பதிவு
சென்னை – அக்டோபர் 9: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்த இரு தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் மற்றும் தவெக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ஜனநாயகத்தைப் பாதுகாத்து, தவெக வெற்றிக்கு வலுசேர்த்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ஆட்சியை நிறுவிய வெற்றித் தலைவருக்கு வலு சேர்க்கும் வகையில் ஜனநாயகத்தைக் காத்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலுக்கு முன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு கடினம் என்றார்கள். வெல்ல முடியாதென சொன்ன எதிர்க்கட்சிகளின் மனக்கணக்கை பொய் கணக்காக்கி இருக்கிறார்கள் இரு தொகுதி மக்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் நான்கு மாத ஆட்சிக்கு நற்சான்றாக, மாபெரும் சாதனையாக இந்த இரு தொகுதிகளின் வெற்றியைப் பார்க்கிறேன். தொடரட்டும் தமிழக வெற்றிக் கழக வெற்றித் தலைவர் அண்ணன் ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சி. தமிழகத்தில் எங்கும் ஒலிக்கட்டும் விசில் புரட்சி.
— Layola Mani (@LoyolaMani) October 9, 2026
தேர்தலுக்கு முன்பாக, இந்த இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது கடினம் என்று எதிர்க்கட்சிகள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வெற்றி பெற முடியாது என்ற எதிர்க்கட்சிகளின் கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் இரு தொகுதி மக்களும் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றாகவும், மாபெரும் சாதனையாகவும் இந்த இரு தொகுதிகளின் வெற்றியைப் பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிப் பயணம் நீடிக்க வேண்டும் என்றும், முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான நல்லாட்சி தொடர வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எங்கும் “விசில் புரட்சி” ஒலிக்கட்டும் என்றும் தனது பதிவில் லயோலா மணி குறிப்பிட்டுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த முடிவுகள் குறித்து தங்களது அரசியல் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்