மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை அறிமுகம் செய்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்!
மதுராந்தகம்: தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கே. மரகதம் குமரவேலை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பி. விஜயராஜ், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஜே. காமாட்சி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ECR பி. சரவணன், செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எம்.எஸ். பாலாஜி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ். குமரவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் கூட்டணி வேட்பாளராக மரகதம் குமரவேல் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அவரை ஆதரித்து நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்