மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6, 2026 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் ஏற்கனவே அதிமுக சார்பில் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக இருந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வழக்கறிஞர் ஐ. பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இரு தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளதால் தேர்தல் போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக ஆளும் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இந்த இடைத்தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

Leave a Reply