மாரண்டஅள்ளியில் பணம் வைத்து சூதாட்டம் – 4 பேர் கைது!
மாரண்டஅள்ளி, செப். 2:
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பணம் வைத்து சூதாடியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மாரண்டஅள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் தின்னகுட்லானஅள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள மாந்தோப்பு அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சிக்கமாரண்டஅள்ளியைச் சேர்ந்த கார்த்திக், குட்லானஅள்ளியைச் சேர்ந்த ராஜா மற்றும் சின்னக்கொடிக்கானஅள்ளியைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்