மத்தூரில் சோகம்..! பாத்ரூம் சுவர் இடிந்து கட்டிடத் தொழிலாளி பலி.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே பாத்ரூம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கட்டிடத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர் அடுத்த சாணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் என்பவரின் மகன் ரமேஷ் (42). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், ரமேஷ் வழக்கம்போல் தனது வீட்டின் அருகே உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குளியலறையின் சுவர் திடீரென இடிந்து ரமேஷ் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் சிக்கிய ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரமேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்று குழந்தைகளின் தந்தையான கட்டிடத் தொழிலாளி சுவர் இடிந்து உயிரிழந்த சம்பவம் சாணிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்