உள்ளாட்சித் தேர்தலுக்கு தவெக தீவிரம்..! மயிலத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
விழுப்புரம்:
விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் மத்திய ஒன்றிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மயிலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் தனசேகரன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் விஜய் நிரஞ்சன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு வார்டு மற்றும் கிளை கழக அளவில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், பூத் கமிட்டி அமைத்தல், வாக்குச்சாவடி முகவர்களை நியமித்தல், தேர்தல் பிரசார உத்திகளை வகுத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் நிர்வாகிகளுக்கு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
மேலும், தமிழக முதலமைச்சர் சா. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு 100 நாட்களைக் கடந்து மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார். அரசின் திட்டங்களின் பயன்களை வீடு வீடாகச் சென்று மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், கழகத்தின் வளர்ச்சிப் பணிகளை ஒவ்வொரு கிராமம் மற்றும் தெரு அளவில் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கழக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தீவிரப்படுத்துதல், இளைஞர் அணி மற்றும் மகளிர் அணியின் செயல்பாடுகளை வலுப்படுத்துதல், சமூக ஊடகங்களில் கழகச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் பணிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் கிளை கழகக் கூட்டங்களை தவறாமல் நடத்தி, கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மயிலம் மத்திய ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து அணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பணிகளையும், கழக வளர்ச்சிப் பணிகளையும் முழு வீச்சில் முன்னெடுக்க நிர்வாகிகள் உறுதி பூண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்