மின்டிகிரியில் விநாயகர் சதுர்த்தி விழா! எம்எல்ஏ ப. முகுந்தன், நகர செயலாளர் சசிகுமார் பங்கேற்பு – பொதுமக்களுக்கு அன்னதானம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள மின்டிகிரி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. அரவிந்த் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் ப. முகுந்தன் மற்றும் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நகர செயலாளர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த எம்எல்ஏ ப. முகுந்தனை பொதுமக்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து விநாயகர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கிருஷ்ணகிரி தென்மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், சூளகிரி வடகிழக்கு ஒன்றிய செயலாளர் பார்த்தசாரதி, மத்திய மாவட்ட ஒன்றிய செயலாளர் ஹரி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் ப. முகுந்தன் மற்றும் நகர செயலாளர் சசிகுமார் ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானத்தைப் பெற்றுச் சென்றனர். விழா ஏற்பாடுகளில் அருண், நித்திஷ், விக்னேஷ், பாரத், மோகன்தாஸ், லோகநாதன், கௌதம், திலீப், மணி, ஆகாஷ், சதீஷ், கௌரேஷ், தினேஷ் உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்து விழாவை சிறப்பாக நடத்தினர்.
தமிழக வெற்றிக்குரல்