நள்ளிரவில் அதிவேக சொகுசு கார் மோதி விபரீதம்… ஸ்கூட்டரில் சென்ற 3 பேர் பலி!
கொச்சி: கேரள மாநிலம், நெடும்பாச்சேரியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 2 மணிக்கு கோர விபத்து
அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்கூட்டரில் பயணம் செய்த தேவிகா, கோபிகா மற்றும் இஜாஸ் ஆகிய மூவரும் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநர் பிடிபட்டார்
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சொகுசு காரின் ஓட்டுநர் சுஹைல் சஜீவ், சம்பவத்துக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது. அப்போது அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான முழுமையான காரணங்கள் மற்றும் பிற விவரங்கள் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்