பாலக்கோட்டில் அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழா கோலாகலம்! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவின்படியும், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. அவர்களின் வழிகாட்டுதலின்படியும், பாலக்கோடு நகரச் செயலாளர் ராஜா தலைமையில் இந்த விழா நடைபெற்றது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!

நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராசன், தெற்கு ஒன்றியச் செயலாளர் கோபால், வடக்கு ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில், முன்னாள் நகரச் செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் விழாவைக் கொண்டாடினர்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு!

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் தீப்பொறி பெருமாள், முன்னாள் மாணவர் அணியின் மாவட்டச் செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ரவிச்சந்திரன், கோவிந்தசாமி, அம்மா பேரவை ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், வார்டு கவுன்சிலர்கள் விமலன், குருமணி, கண்ணையன், முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், வீரமணி, புதூர் சுப்ரமணி, கிளை நிர்வாகிகள் கொளந்தை, ராஜா, அர்ஜுனன், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த ராஜா அசோக், கிரிநாத், சோமேஷ், நந்தகுமார், விஷ்ணு, புஷ்பா, கார்த்திக், மோகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Leave a Reply