பாலக்கோடு அரசு மகப்பேறு மருத்துவமனையில் 44 தாய்மார்களுக்கு தங்க மோதிரம் – மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த தாய்மார்கள்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு: பாலக்கோடு அரசு மகப்பேறு மருத்துவமனையில், தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் குழந்தை பெற்ற 44 தாய்மார்களுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மருத்துவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு முன்னிலை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

44 தாய்மார்களுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம்

பாலக்கோடு அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பெற்ற 44 குழந்தைகளின் தாய்மார்களுக்கு, தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

தங்க மோதிரத்தை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.

தவெக நிர்வாகிகள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் முத்தழகு, ஒன்றிய செயலாளர்கள் குமார், கிருஷ்ணன், நகரச் செயலாளர் விக்னேஷ் மற்றும் கிளைச் செயலாளர்கள் நவீத், சுகுமார், முரளி, அரவிந்த், கார்த்திக், பாபா ஜான், ஜீசான், சிலம்பரசன், லோகநாதன், சபரி, பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட இந்தப் பயனுதவி, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

Leave a Reply