பாலக்கோடு அருகே 3 வயது மகளுடன் தாய் மாயம்! கணவர் காவல் நிலையத்தில் புகார்

பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் அருகே 3 வயது பெண் குழந்தையுடன் தாய் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திரமங்கலம் அருகே உள்ள குளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (35). கூலித்தொழிலாளியான இவருக்கு சங்கீதா (30) என்ற மனைவியும், அன்பு (13), தனுஷ் (6) ஆகிய இரு மகன்களும், மீரா (3) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 11ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சங்கீதாவும் அவரது 3 வயது மகள் மீராவும் மீண்டும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் இருவரைப் பற்றிய தகவல் கிடைக்காததால், முனியப்பன் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், மகேந்திரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தாயையும் குழந்தையையும் தேடும் பணியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply