பாலக்கோடு, புலிக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை 22ம் தேதி மின்தடை!
தருமபுரி – பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, புலிக்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (அக்டோபர் 22, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை!
இதுகுறித்து வெள்ளிசந்தை துணை மின் நிலையச் செயற்பொறியாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெள்ளிசந்தை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
பாலக்கோடு, மாரண்டஅள்ளி, புலிக்கரை, ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரணஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கனவனஅள்ளி, அமானிமல்லாபுரம், பொரத்தூர், மோட்டூர், பஞ்சப்பள்ளி, பெல்லுஅள்ளி, பேவுஅள்ளி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, சோமனஅள்ளி மற்றும் பத்தலஅள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் மின்தடையைக் கருத்தில் கொண்டு தங்களது பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்