பாலக்கோடு பேரூராட்சி அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி சிலை திறப்பு – காந்தி ஜெயந்தியில் மரியாதை.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகம் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலை, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் திறந்து வைக்கப்பட்டது.
பாலக்கோடு பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் புதிதாக கட்டப்பட்டதைத் தொடர்ந்து, அதன் முன்புற வளாகத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றன.
இதையடுத்து, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பத்தேகான், ரூஹித், மோகன், ஜெயந்திமோகன், சரவணன், வகாப்ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மீனவர் அணி மாவட்ட துணைத் தலைவர் குமரன், அவைத்தலைவர் அமானுல்லா, ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, கிளை செயலாளர் ராஜூ, ஐடி.விங் ஸ்ரீதர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
காந்தி ஜெயந்தி நாளில் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்பட்ட நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே கவனம் பெற்றது.
தமிழக வெற்றிக்குரல்