பழனியில் OVJ ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி புதிய கிளை திறப்பு! 108 வேல் நகைத் தொகுப்புகள் அறிமுகம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் OVJ ஒரிஜினல் வாசவி ஜூவல்லரியின் புதிய கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
108 வேல் நகைத் தொகுப்புகள் அறிமுகம்
பழனி முருகப்பெருமானின் சிறப்பைப் போற்றும் வகையில், தங்கம் மற்றும் வெள்ளியில் தயாரிக்கப்பட்ட மோதிரங்கள், காப்புகள் உள்ளிட்ட 108 வேல் வடிவிலான பிரத்யேக நகைத் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், குறைந்த எடையிலான பழங்கால வடிவமைப்பு நகைகள், அன்றாடம் அணியக்கூடிய நகைகள் மற்றும் பல்வேறு வைர நகைத் தொகுப்புகளும் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
உலகத் தரத்திலான நகை வாங்கும் அனுபவம்
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த கடையின் உரிமையாளர், பழனி மக்களுக்கு உலகத் தரத்திலான நகை வாங்கும் அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்தப் புதிய விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு புதிய நகை வடிவமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் நேரில் வருகை தந்து புதிய நகைத் தொகுப்புகளைப் பார்வையிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழக வெற்றிக்குரல்