பஞ்சப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 39 தாய்மார்களுக்கு தங்க மோதிரம் – தாய் மாமன் திட்டத்தில் வழங்கல்.

தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், குழந்தை பெற்ற 39 தாய்மார்களுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவர் ஸ்ரீசோனியா தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு முன்னிலை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், பஞ்சப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்ற 39 குழந்தைகளின் தாய்மார்களுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

திட்டத்தின் மூலம் தங்க மோதிரங்களை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். குழந்தை பெற்ற தாய்மார்களை ஊக்குவிக்கும் வகையிலும், அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் கிருஷ்ணன், செல்வி, சண்முகம், சரண், யுவராஜ், அருணகிரி, பாவேந்தன், ஆதிநாராயணசுவாமி, சரவணன், சஞ்சீவகுமார், சரஸ்வதி, முகுந்தன், அருள்மஞ்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.

Leave a Reply