ஆசிய விளையாட்டுப் போட்டியில் பரணிகா இளங்கோவனுக்கு வெண்கலம்! – முதல்வர் வாழ்த்து!
கோல் ஊன்றித் தாண்டும் போட்டியில் சாதனை – ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்
சென்னை – செப்டம்பர் 26: ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கோல் ஊன்றித் தாண்டும் (Pole Vault) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு முதலமைச்சர் தனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கோல் ஊன்றித் தாண்டும் (Pole Vault) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும்… pic.twitter.com/6Z0X488IMR
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 25, 2026
கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இவ்வெற்றியைப் பெற்றுள்ள அவரது சாதனையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வெற்றி, இலக்கை நோக்கி அயராது உழைக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பரணிகா இளங்கோவன் தொடர்ந்து பல உயரங்களை அடைய வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்