பென்னாகரத்தில் தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும் விழா!

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், நேற்று 7ம் தேதி குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும், தருமபுரி மாவட்ட புறநகர் மாவட்டச் செயலாளருமான எஸ். கஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரங்களை வழங்கி சிறப்பித்தார்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஏராளமான குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கப்பட்ட நிகழ்வு, குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply