பேர்ணாம்பட்டில் புதிய கால்நடை மருந்தகம் திறப்பு – அமைச்சர் விஜய்பாலாஜி திறந்து வைத்தார்!

வேலூர், செப்.09:

வேலூர் மேற்கு மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்ணாம்பட்டு கிழக்கு ஒன்றியம், ஏரிகுத்தி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகம் இன்று (09.09.2026) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு. விஜய்பாலாஜி அவர்கள் கலந்துகொண்டு கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. க.சிந்து அழகப்பன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வினோத்கண்ணன், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் திரு. சுதாகர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் சார்பு அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply