பேர்ணாம்பட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்.

பேர்ணாம்பட்டு:

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம் மற்றும் நகரம் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை மற்றும் நன்றி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K. சிந்து அழகப்பன் தலைமை தாங்கினார். தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால பணிகள், பேர்ணாம்பட்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கடந்த காலங்களில் கழகப் பணிகளில் ஈடுபட்டு பங்களித்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகர செயலாளர் D. இளங்கோ கலந்து கொண்டார். பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர்கள், நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் நிறைவில், நிகழ்வில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply