பெத்தலப்பள்ளி ஆனந்த் நகரில் புதிய மின்மாற்றி – பொதுமக்கள் நன்றி!

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தலப்பள்ளி ஆனந்த் நகரில் மின் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் ப. முகுந்தனிடம் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, அப்பகுதியில் நிலவி வந்த மின்பற்றாக்குறையை போக்கும் வகையில் புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஆனந்த் நகரில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதன் மூலம் அப்பகுதியில் அடிக்கடி ஏற்பட்ட மின்தடை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தங்களது நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றி அமைத்துக் கொடுத்த கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் ப. முகுந்தனுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதி மக்களின் மின்சார தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply