வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் முயற்சியா? 43 வயது நபர் கைது.

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலைப்பகுதியில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 19 வயது இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படும் 43 வயது நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதூர் நாடு மலைப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது தம்பி மற்றும் தங்கைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததாகவும், இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தத்தைக் கேட்ட அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

சம்பவம் தொடர்பாக இளம்பெண் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், புதூர் நாடு தகரக்குப்பம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் குரங்குகாளி (43) என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து குரங்குகாளியை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply