ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் – அமைச்சர் ஜெகதீஸ்வரி மரியாதை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு, தியாகி இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இம்மானுவேல் சேகரனாரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர். சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இம்மானுவேல் சேகரனார் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் பல்வேறு பகுதிகளில் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

மலையடிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியும் அமைதியான முறையில் நடைபெற்ற நிலையில், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply