ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 89-வது White Coat Ceremony! புதிய மருத்துவ மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு.
சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கும் வகையில், 89-வது மருத்துவ இளநிலை மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி (White Coat Ceremony) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு, புதிதாக மருத்துவப் படிப்பில் இணைந்த மாணவர்களுக்கு வெள்ளை அங்கி (White Coat) மற்றும் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஸ்டெதஸ்கோப் (Stethoscope) வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
வெள்ளை அங்கி, ஸ்டெதஸ்கோப் வழங்கி வரவேற்பு
மருத்துவக் கல்வியில் புதிய பயணத்தைத் தொடங்கிய மாணவர்களை வரவேற்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு வெள்ளை அங்கி மற்றும் ஸ்டெதஸ்கோப் வழங்கப்பட்டன.
மருத்துவத் துறையில் சேவை மனப்பான்மை, பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிகழ்வாக இந்த வரவேற்பு விழா அமைந்தது.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் என். மரிய வில்சன், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கே.வி. விஜய் தாமு, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ. அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிதாக மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அவர்கள் மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்கி மக்களுக்குச் சிறப்பான மருத்துவச் சேவை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினர்.
தமிழக வெற்றிக்குரல்